பவன் கல்யாணுடன் அர்ஜுன் தாஸ் - வைரலாகும் புகைப்படங்கள்

பவன் கல்யாண் நடிக்கும் "ஓஜி" படத்தில் வில்லன்களில் ஒருவராக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார்.;

Update:2025-06-07 23:39 IST

சென்னை,

தனித்துவமான நடிப்பு மற்றும் குரலுக்கு பெயர் பெற்ற அர்ஜுன் தாஸ், 'கைதி', 'விக்ரம்', 'மாஸ்டர்' மற்றும் 'குட் பேட் அக்லி' போன்ற படங்களின் வில்லனாக நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவர் தற்போது சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் "ஓஜி" படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திருந்து அர்ஜுன் தாஸ், புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனுடன் ஒரு உற்சாகமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ''இதை நான் பெருமையாக நினைக்கிறேன். உங்களுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளையும் மறக்கவே மாட்டேன். மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

"ஓஜி" படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி முக்கிய வில்லனாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்