ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" டீசர் நாளை வெளியீடு

மனு ஆனந்த் இயக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.;

Update:2025-02-21 20:16 IST

சென்னை,

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்' படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், அடுத்ததாக 'மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். மேலும், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி ஜூலை மாதத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்