முன்பு கோல்ப் வீராங்கனை...இப்போது சினிமாவில் டாப் ஹீரோயின் - யார் தெரியுமா?
சென்னை,
இவர் தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். ஒரு காலத்தில் தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்ற இந்த நடிகை தற்போது நடிப்பதை குறைத்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல, ரகுல் பிரீத் சிங்தான். இவர் கல்லூரி நாட்களில் தேசிய அளவிலான கோல்ப் வீராங்கனையாக இருந்தார். பின்னர் சினிமாவில் நுழைந்து தற்போது டாப் ஹீரோயினாக இருக்கிறார்.
தனது 15 வருட நடிப்பு வாழ்க்கையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தே தே பியார் தே, தேங்க் காட், மர்ஜாவான் போன்ற படங்களிலும், டாக்டர் ஜி, தேவ், துருவா, இந்தியன் 2, அயலான், என்.ஜி.கே போன்ற பல தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அவர் தே தே பியார் தே 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. ராகுல் பிரீத் சிங் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியைக் காதலித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 21 அன்று திருமணம் செய்து கொண்டார்.