50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள "டிராகன்"

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக 50-வது நாளை நிறைவு செய்துள்ளது.;

Update:2025-04-11 21:32 IST

சென்னை,

'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் வாரத்தில் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இதுவரை சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் டிராகன் படக்குழுவினர் நடிகர் விஜய்யை சந்தித்தனர். அஷ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்சனா, லியோன் ஜேம்ஸ், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் விஜய்யோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், கடந்த மார்ச்.21 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'டிராகன்' வெளியான போதிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50-வது நாளை இன்று நிறைவு செய்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக, 'டிராகன்' இளம் சமூதாயத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பலரும் அதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளைத் தங்களது வாழ்வோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்