ராஷ்மிகா மந்தனா நடித்த 'சாவா' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-01-20 14:07 IST

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப்பின் கணவர் ஆவார். சமீபத்தில் பிரபல இயக்குனர் ஆனந்த் திவாரி இயக்கத்தில் இவர் 'பேட் நியூஸ்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது, 'சாவா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். லக்ஸ்மன் உடேகர் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானநிலையில், வரும் 22-ம் தேதி டிரெய்லர் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக விக்கி கவுசலின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்