இந்தியிலும் ரிலீசாகும் ''பேட் கேர்ள்''

இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-09-22 07:28 IST

சென்னை,

அஞ்சலி சிவராமன் நடித்த பேட் கேர்ள் திரைப்படம் இந்தியிலும் ரிலீசாக உள்ளது.

காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பேட் கேர்ள்'.

இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான பேட் கேர்ள் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அஞ்சலி சிவராமனின் நடிப்பு பாராட்டப்பட்டது. இந்நிலையில், இப்படம் இந்தியிலும் வெளியாக தயாராகி உள்ளது. அதன்படி, இப்படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, வருகிற 26-ம் தேதி வெளியாகிறது.

தமிழ் விமர்சகர்களை கவர்ந்தது போல் இந்தி பார்வையாளர்களையும் பேட் கேர்ள் படம் கவருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்