சந்தோஷத்தில் ''கூலி'' பட வில்லி...ரசிகர்களுக்கு சொன்ன முதல் வார்த்தை

கல்யாணி வேடத்திற்காக தனக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு ரச்சிதா நன்றி தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-19 08:00 IST

சென்னை,

ரஜினிகாந்தின் ''கூலி'' படத்தில் ரச்சிதா ராமின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. கன்னடத்தில் கதாநாயகியாக நடித்து வரும்  அவர் இப்படத்தில் கல்யாணி என்ற வில்லி கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், கல்யாணி வேடத்திற்காக தனக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு ரச்சிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

''கூலி படத்தில் என்னுடைய கல்யாணி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு நம்பமுடியாத அளவிற்கு அருமையாக இருந்தது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டிரோல் செய்பவர்களுக்கும் மீம்ஸ் போடுபவர்களுக்கு நன்றி.

என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய லோகேஷ் கனகராஜிக்கு நன்றி. ஜாம்பவான்களுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 'கூலி' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு படக்குழுவிற்கு வாழ்த்துகள்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்