''என்னை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை''...யாஷின் அம்மாவுக்கு நடிகை தீபிகா பதில்

நடிகை தீபிகா தாஸ் குறித்து புஷ்பா சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.;

Update:2025-08-29 20:15 IST

சென்னை,

நடிகர் யாஷின் அம்மா புஷ்பா, சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி, ''கோத்தலா வாடி'' என்ற புதிய படத்தை தயாரித்தார். இம்மாதம் 1-ம் தேதி வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் ஏமாற்றத்தை அளித்தது.

முன்னதாக இந்தப் படத்தின் புரமோஷன்களின்போது, நடிகை தீபிகா தாஸ் குறித்து புஷ்பா சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது அடுத்த படத்தில் தீபிகா தாஸை நடிக்க வைக்க திட்டம் உள்ளதா? என்று தொகுப்பாளினி புஷ்பாவிடம் கேட்டார். அதற்கு அவர், தீபிகா ஒரு பெரிய நட்சத்திர ஹீரோயினா? அவர் என்ன சாதித்தார், குறிப்பாக அவரைப் பற்றி கேட்கிறீர்கள்? என்று கூறினார். அவருடைய இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

சமீபத்தில், இந்த சர்ச்சைக்கு தீபிகா தாஸ் பதிலளித்தார். அவர் கூறுகையில், ''புதிய கலைஞர்களை துறைக்கு அறிமுகப்படுத்த விரும்புவோர், முதலில் அந்தக் கலைஞர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். திரையுலகில் முன்னேற இதுவரை யாருடைய பெயரையும் நான் பயன்படுத்தியதில்லை.

நான் ஒரு பெரிய நடிகையாக இல்லாமல் போகலாம், எதையும் சாதிக்காமல் இருக்கலாம், ஆனால்...என்னைப் பற்றி மோசமாகப் பேச அம்மாவாக இருந்தாலும் சரி, புஷ்பம்மாவாக இருந்தாலும் சரி, யாருக்கும் உரிமை இல்லை. நான் இதுவரை அவருக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருந்தேன், பயத்தினால் அல்ல.'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்