கண் முன்னாடியே அப்படி சொன்னார்கள்....அதை தாங்க முடியவில்லை - தீபிகா படுகோன்

தீபிகா, தற்போது அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகி உருவாகி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.;

Update:2025-09-17 08:00 IST

சென்னை,

இப்போது நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களாக இருக்கும் பலர் இதற்கு ஆளாகி இருக்கிறார்காள். தற்போது அதை பற்றி பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், ஸ்டார் ஹீரோயின் தீபிகா படுகோனும் பாடி ஷேமிங்கை எதிர்கொண்டுள்ளார். இதை பற்றி அவரே சொல்லியிருக்கிறார்.

அவர் முதன்முதலில் துறைக்கு வந்தபோது, பலர் அவரது நிறம் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறினார். தனது புகைப்படங்களை சில இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு அனுப்பியபோது, அவர்கள் தன்னை ஒரு ஆண்போல இருப்பதாக கூறியதாக தெரிவித்தார். தனக்கு முன்னால் இதுபோன்ற கருத்துக்கள் கூறப்படும்போது அதை தாங்க முடியவில்லை என்று தீபிகா கூறினார்.

தீபிகா, தற்போது அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகி உருவாகி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்