தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு பணி தொடக்கம்
தனுஷின் 54வது படத்தை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார்.;
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தனுஷின் கைவசம் "இட்லி கடை, தேரே இஷ்க் மெயின்" ஆகிய படங்கள் உள்ளன.
இந்த நிலையில், தனுஷின் 54வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, நடிகர் தனுஷ் அடுத்ததாக 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி உள்ளதாக தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
பருத்தி தோட்டத்தில் தீ பிடிக்க, தனுஷ் நின்றுகொண்டிருக்கும் போஸ்டர் ரசிகர்களிடம் படத்தின் மீதான ஆவலை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.