துருவ் விக்ரமின் “பைசன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் அக்டோபர் 17-ந் தேதி வெளியாகிறது.;

Update:2025-08-30 18:43 IST

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். .

இதைத் தொடர்ந்து 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பைசன் காளமாடன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது. ‘பைசன்’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ‘பைசன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்