ஆஸ்கர் முயற்சி - புதிய அவதாரம் எடுத்த நடிகர் சூர்யா மகள்
ஆவண குறும்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா.;
சென்னை,
''லீடிங் லைட்''(LEADING LIGHT) என்ற ஆவண குறும்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா.
பாலிவுட் துறையில் பணிபுரியும் ''லைட் வுமன்''(LIGHT WOMEN) பற்றிய சொல்லப்படாத கதைகளை இந்த குறும்படம் பேசுகிறது. ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் முயற்சியாக அக்.2ம் தேதி வரை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரீஜன்சி திரையரங்கில் இப்படம் திரையிடப்படுகிறது.
தியா உருவாக்கிய இந்த ஆவணப் படம் மாணவர்கள் அளவிலான குறும்பட போட்டியில் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.