"ஆடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை தீர்மானிக்காதீர்கள்"- வேதிகா ஆவேசம்
உடைகளை வைத்து நடிகைகளை விமர்சிக்கும் போக்கு மாறவேண்டும் என்று வேதிகா கூறியுள்ளார்.;
சென்னை,
‘முனி', ‘சக்கரகட்டி', ‘காளை', ‘பரதேசி', ‘காவிய தலைவன்', ‘காஞ்சனா-3', ‘பேட்டாராப்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், வேதிகா. வெண்ணை கட்டி தேகம் கொண்ட வேதிகா, அவ்வப்போது தனது கலக்கல் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதற்கிடையில் அணியும் உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தைத் தீர்மானிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேதிகா கூறும்போது, ‘‘பொதுவாகவே நடிகை என்றாலே எளிதில் விமர்சித்து விடுகிறார்கள். கவர்ச்சியாக உடை அணிந்தாலே போதும். ‘அப்படியா...' என்று பேச தொடங்கிவிடுகிறார்கள். உடைகளை வைத்து நடிகைகளை விமர்சிக்கும் போக்கு மாறவேண்டும். நான் கூட அவ்வப்போது பிகினி அணிகிறேன். விமர்சனங்களுக்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. நான் யாரென்று எனக்கு தெரியும். தவறான புத்தி கொண்டவர்கள் மாறினால் நல்லது'', என்றார்.