குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி...திருமணத்திற்குப் பிறகும் குறையாத மதிப்பு - யார் அந்த நடிகை தெரியுமா?
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ளார்.;
சென்னை,
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது கதாநாயகியாக முத்திரை பதித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ளார். இவர் வேறு யாருமல்ல, கீர்த்தி சுரேஷ்தான். அக்டோபர் 17, 1992 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே படங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இவரது தந்தை இயக்குனர் ஜி. சுரேஷ் குமார், தாயார் முன்னாள் நடிகை மேனகா. திரைப்பட பின்னணி குடும்பத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள பேர்ல் அகாடமியில் பேஷன் டிசைனிங்கில் பட்டம் பெற்றார்.
பின் தனது தந்தை தயாரித்த பைலட்ஸ், அச்சனேயனேயனேயென்னிக்கஷ்டம், குபேரன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு, 2013-ம் ஆண்டு கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான சைமா( SIIMA)விருதை வென்றார். 2015 ஆம் ஆண்டில், கீர்த்தி தமிழ் ,தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்தார். குறிப்பாக மகாநதியில் சாவித்ரி வேடத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். 2019 முதல் 2024 வரை பல படங்களில் நடித்தார்.
இந்தியிலும் அறிமுகமானார். ஆனால் இந்தியில் அவர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. டிசம்பர் 2024 இல், அவர் தனது நீண்டகால நண்பரான ஆண்டனியை மணந்து திருமண உறவில் நுழைந்தார். தற்போது, கீர்த்தி சுரேஷ் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.