''அன்பானவர்...கத்தியைப்போல கூர்மையானவர்'' - ஸ்ருதிஹாசன் பாராட்டும் நடிகர் யார் தெரியுமா?
ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி ஸ்ருதிஹாசன் பேசினார்.;
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் ஆக்சன் படமான கூலி, ஆகஸ்ட் 14 அன்று தியேட்டரில் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் சவுபின் ஷாஹிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி ஸ்ருதி ஹாசன்பேசினார். அவர் கூறுகையில்,
"என் அப்பாவும் ரஜினிகாந்த் சாரும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள். ரஜினி சார் கத்தியைப் போல கூர்மையானவர். புத்திசாலி, அன்பானவர் மற்றும் மிகவும் கூலானவர். அவருடன் பணிபுரிவதில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள்" என்றார்.