''கமல் சாரும் நானும் சந்திக்கும்போது...அதைப் பற்றித்தான் பேசுவோம்'' - பகத் பாசில்
கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து பகத் பாசில் பகிர்ந்து கொண்டார்.;
சென்னை,
கமல்ஹாசனை சந்திக்கும்போது ஒருபோதும் சினிமாவைப் பற்றிப் பேசுவதில்லை என்றும், நகைச்சுவையாக ஏதாவது பேசுவோம் என்றும் பகத் கூறி இருக்கிறார்.
பகத் பாசில், வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள ''மாரீசன்'' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து பகத் பாசில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில்,
"கமல் சாரும் நானும் சந்திக்கும் போது, இரண்டு, மூன்று மணி நேரம் நகைச்சுவையாக ஏதாவது பேசுவோம். சினிமாவுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இருக்காது. அது பெரும்பாலும் எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றியது" என்றார்
கமல்ஹாசனுடன் பகத் பாசில் ''விக்ரம்'' படத்தில் நடித்திருந்தார்.