நடித்தது 2..ஒன்று விஜய்யுடன் - இந்த நடிகை யார் தெரிகிறதா?
தமிழில் அவர் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.;
சென்னை,
இந்த புகைப்படத்தில் இருப்பவர் மலையாளத்தில் பாப்புலராக இருக்கும் நடிகை. அந்த நடிகை தமிழிலும் நடித்திருக்கிறார். தமிழில் அவர் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை ''டாடா'' படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா தாஸ்தான். மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத் துறைகளில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த நடிகை அபர்ணா தாஸ்.
இவர் மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளியான ஞான் பிராக்சன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய ''பீஸ்ட்'' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸ், ''டாடா'' படத்தில் கதாநாயகியாக நடித்தார். கவின் ஜோடியாக இவர் நடித்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.
தெலுங்கில், இவர் ''ஆதிகேசவா'' படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் அவர் ஹீரோவின் சகோதரியாக நடித்தார். இதற்கிடையில் ''மஞ்சுமல் பாய்ஸ்'' பட நடிகர் தீபக் பரம்போலை சமீபத்தில் அபர்ணா மணந்தார்.