நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் நிவின் பாலி 'டோல்பி தினேஷன்' என்ற படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்க உள்ளார்.;

Update:2025-04-16 07:25 IST

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது '1001 நுனாகல்' படத்தை இயக்கிய தமர் கேவி இயக்கத்தில் 'டோல்பி தினேஷன்' என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

அஜித் விநாயகா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இசையை டான் வின்சண்ட் மேற்கொள்கிறார். இதில் நிவின் பாலி ஆட்டோ டிரைவராக நடிக்க உள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து, "ஆக்சன் ஹீரோ பைஜு 2, மல்டிவெர்ஸ் மன்மதன், பேபி கேர்ள்" போன்ற திரைப்படங்களை நிவின் பாலி தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்