தொடர் தோல்வி படங்கள்...தனுஷுக்கு ஜோடியாக வாய்ப்பு - வெற்றி கிடைக்குமா?

டி54 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;

Update:2025-07-05 13:28 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு, தற்போது பூஜா ஹெக்டே தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் சூர்யாவுடன் இவர் நடித்திருந்த ''ரெட்ரோ'' படம் ஓரளவு வெற்றி வெற்றது. அடுத்ததாக விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், தற்காலிகமாக டி54 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விக்னேஷ் ராஜா இயக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. "குபேரா" படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இந்தியில் ''தேரே இஷ்க் மெய்ன்'' படப்பிடிப்பை முடித்திருக்கும் தனுஷ் அடுத்ததாக இப்படத்தில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜா ஹெக்டேவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் முன்னணி நடிகையாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் பூஜா ஹெக்டே இந்த முறையாவது வெற்றி படம் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்