2025-ம் ஆண்டின் முதல் பாதி நிறைவு...2-ம் பாதியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 தமிழ் படங்கள்
கமல்ஹாசனின் தக் லைப் படம் பெரும் ஏமாற்றத்தை அளித்தநிலையில், இப்போது அனைவரின் கவனமும் ரஜினிகாந்தின் ''கூலி'' மீது திரும்பியுள்ளது.;
சென்னை,
2025-ம் ஆண்டின் முதல் பாதி சற்று சுவாரஸ்யமாக முடிந்திருக்கும் நிலையில், அடுத்த ஆறு மாதங்கள் தமிழ்த் திரையுலகிற்கு மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பெரிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன.
கமல்ஹாசனின் ''தக் லைப்'' படம் பெரும் ஏமாற்றத்தை அளித்தநிலையில், இப்போது அனைவரின் கவனமும் ரஜினிகாந்தின் ''கூலி'' மீது திரும்பியுள்ளது. அதே நேரத்தில், பிரதீப் ரங்கநாதனின் ''டியூட்'' மற்றும் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'' போன்ற படங்களும் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
2025-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் டாப் 5 தமிழ் படங்கள்:-
''கூலி'' - ஆகஸ்ட் 14
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி, தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அமீர் கான் கிளைமாக்ஸில் ஒரு சிறப்பு வேடத்திலும், பூஜா ஹெக்டே ஒரு சிறப்பு பாடலிலும் தோன்றுகிறார்கள்.
''மதராஸி'' - செப்டம்பர் 5
''சிக்கந்தர்'' இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுடன் முதல் முறையாக இணைந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ''மதராஸி''.
இதில், ருக்மணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் மற்றும் வித்யுத் ஜம்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர். முருகதாஸின் பாலிவுட் படமான 'சிக்கந்தர்' பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்ததால், அவருக்கு இப்படம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'' - செப்டம்பர் 18
பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கிருத்தி ஷெட்டி, கவுரி கிஷன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
''இட்லி கடை'' - அக்டோபர் 1
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இதில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு தனுஷுடன் நித்யா மேனன் இணைந்திருக்கிறார்.
மேலும் இதில், அருண் விஜய் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
''பைசன்'' - அக்டோபர் 17
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பைசன்.
கபடி விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாகவும், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள், அருவி மதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.