'கெட் செட் பேபி' படத்திற்கு 'யு' தணிக்கை சான்றிதழ்

உன்னி முகுந்தன் நடித்துள்ள 'கெட் செட் பேபி' படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-02-19 06:57 IST

சென்னை,

நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் நடிப்பில் வெளியான 'மாளிகப்புர'ம் திரைப்படமும் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'மார்கோ'. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது.

இதனையடுத்து, இவர் நடித்துள்ள படம் 'கெட் செட் பேபி'. வினய் கோவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் நிகிலா விமல் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஒய்வி ராஜேஷ் மற்றும் அனூப் ரவீந்திரன் திரைக்கதை எழுதியுள்ளனர். இப்படம் வருகிற 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெயல்ர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், தற்போது 'கெட் செட் பேபி' படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்