தனுஷின் 54வது படம் குறித்து அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்

தனது படைப்புகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குனர் விக்னேஷ் ராஜா என்று ‘டி54’ படம் குறித்து ஜி வி பிரகாஷ் கூறியுள்ளார்.;

Update:2025-10-25 16:25 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் இயக்கி நடித்து இட்லி கடை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், போர் தொழில் பட இயக்குனர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘டி54’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இந்த படம் பிரமாண்டமான பொருட்செலவில், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘டி54’ பிளாக்பஸ்டர் படம் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிளாக்பஸ்டர் படம், எழுத்து மற்றும் ஆடியோ தொடர்ந்து வருகிறது. சமீபத்திய காலங்களில் தனது படைப்புகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மற்றும் சைலண்ட் கில்லர்” என்று கூறியுள்ளார். இதனால் ‘டி54’ படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்