"அவரே கிப்ட்தான்.." ரசிகரின் கேள்விக்கு ஜோதிகா கொடுத்த பதில்
ரசிகரின் கேள்விக்கு ஜோதிகா கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.;
சென்னை,
1997-ல் வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா. அதன்பிறகு இந்தி படங்களில் அவர் நடிக்கவில்லை. தமிழில் 1999-ல் நடித்த வாலி படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் படங்களிலேயே நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், ரசிகரின் கேள்விக்கு ஜோதிகா கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி, ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஒரு புகைப்படத்தின் கமெண்ட் பக்கத்தில் ரசிகர் ஒருவர் 'உங்களுக்கு சூர்யா கொடுத்த சிறந்த கிப்ட் எது என்று கேட்டார். அதற்கு ஜோதிகா'"அவரே கிப்ட்தான்.." என்று பதிலளித்திருக்கிறார்.