கனமழையால் அமிதாப்பச்சன் பங்களாவிற்குள் புகுந்த வெள்ளம்

நடிகர் அஜய் தேவ்கன்-கஜோல் உள்பட பிரபலங்கள் பலரது வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.;

Update:2025-08-22 08:20 IST

மும்பை,

மும்பையில் சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மும்பையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை வெள்ளத்தால் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலிவுட் திரை உலகில் ஜுகு பகுதியில் அமைந்துள்ள அமிதாப் பச்சன் வீட்டிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதே போன்று நடிகர் அஜய் தேவ்கன்-கஜோல் உள்பட பிரபலங்கள் பலரது வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.

அமிதாப் பச்சன் வீட்டில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை வீடியோ காட்சிகளாக சமூக வலைதளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ளார். வீடியோ காட்சிகளோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் ஆயிரக்க ணக்கான கோடி ரூபாய் மதிப்புடையவராக இருந்தாலும் மும்பை மழையில் இருந்து யாரும் தப்ப முடியாது .அம்பானி அல்லது அமிதாப்பச்சன் கூட இதற்கு விதிவிலக்கல்ல என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்