“ஜனநாயகன்” படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரவி மோகன்

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.;

Update:2026-01-05 21:22 IST

சென்னை,

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது. ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு வெளிநாடு, மற்ற மாநிலங்களில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில் “ஜனநாயகன் திரைப்படம், உங்களுடைய ரசிகனும் சகோதரனான நான் உட்பட அனைவரது இதயங்களையும் நிச்சயம் கொள்ளைகொள்ளும். படம் வெற்றிடைய சகோதரர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்