அமீர் கானின் 'ஹேப்பி படேல்'...டிரெய்லரை பார்த்தீர்களா?

இந்த படம் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-12-20 21:41 IST

சென்னை,

பாலிவுட் நடிகர் அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரித்த படம் 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' வெளியாக உள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் இந்த படத்தை இயக்குவதோடு, முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.

'டெல்லி பெல்லி' படத்திற்குப் பிறகு அமீர் கான் - வீர் தாஸ் கூட்டணியில் உருவாகும் படம் இது என்பதால், பார்வையாளர்கள் இந்தப் படத்தைப் பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படம் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் படக்குழு இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டது.

வீர் தாஸின் நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகளால் டிரெய்லர் பிரமிக்க வைக்கிறது. வீர் தாஸுடன், மோனா சிங், மிதிலா பால்கர் மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்