4 மணி நேரத்திற்கு மேல் என்னால் தூங்க முடியாது - நடிகர் அஜித்

குட் பேட் அக்லி படத்திற்கு அடுத்ததாக அஜித் மீண்டும் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.;

Update:2025-10-03 08:07 IST

சென்னை,

குட் பேட் அக்லி படத்தில் கடைசியாக நடித்திருந்த அஜித், தற்போது கார் ரேஷிங்கில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், தனது தொழில் வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். தனக்கு தூக்கமே வராது என்று கூறினார். தூக்கக் கோளாறு காரணமாக ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதாக அவர் தெரிவித்தார்.

குட் பேட் அக்லி படத்திற்கு அடுத்ததாக அஜித் மீண்டும் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏ.கே. 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்