’ஜிம் போகாமலேயே எடை குறைத்தேன்’ - பிரபல நடிகை

இந்த கதாநாயகி ஜிம்மிற்கு செல்லாமலேயே எடையைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார்.;

Update:2025-11-24 11:29 IST

சென்னை,

பல கதாநாயகிகள் திரைப்படங்களில் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப எடை அதிகரித்து குறைக்கிறார்கள். சில கதாநாயகிகள் தொடர்ந்து ஜிம்மில் கடுமையான பயிற்சிகள் செய்து பிட்டாக மாறுகிறார்கள். ஆனால் இந்த கதாநாயகி ஜிம்மிற்கு செல்லாமலேயே எடையைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார்.

அவர் யார் தெரியுமா?. வேறு யாருமில்லை வித்யா பாலன்தான். சமீபத்தில், இவர் ஜிம்மிற்கு செல்லாமலேயே எடை குறைத்ததாக கூறினார். தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் குண்டாக இருந்ததாகவும், இதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் கூறினார்.

மேலும், எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறேனோ, அவ்வளவு எடை கூடியதாகவும், இதனால், பிரச்சினையை கண்டறிய ஒரு மருத்துவ குழுவை அணுகியதாகவும் தெரிவித்தார். அவர்கள் தன்னிடம் இது கொழுப்பல்ல, வீக்கம் என்று சொன்னதாகவும், பின்னர், அவர்கள் கொடுத்த வீக்கத்தைக் குறைக்கும் உணவுமுறையை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்