''ஹீரோ நான்தான்...ஆனால் அந்த படம் ஸ்ரீதேவியாலதான் ஹிட்டானது'' - நாகார்ஜுனா

அந்த படத்தின் தான் பொம்மைபோல இருந்ததாக நாகார்ஜுனா குறிப்பிட்டார்.;

Update:2025-08-18 13:27 IST

சென்னை,

இரண்டு மாதங்களுக்கு முன்பு, 'குபேரா' படத்தில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த நாகார்ஜுனா, சமீபத்தில் 'கூலி' திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட நாகார்ஜுனா, தனது சினிமா வாழ்க்கை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

நாகார்ஜுனா தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் நடித்த படங்களில், 'ஆக்கரி போராட்டம்' ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. 1988 இல் வெளியான இந்த அதிரடி திரைப்படத்தை ராகவேந்திர ராவ் இயக்கினார். ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்க இளையராஜா இசையமைத்தார். அஸ்வினி தத் இதை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்தார்

இந்தப் படத்தைப் பற்றி அவர் பேசுகையில், 'ஆக்கரி போராட்டம்' படம் வெற்றி பெற்றதற்கு இயக்குனர் ராகவேந்திர ராவ் மற்றும் கதாநாயகி ஸ்ரீதேவி ஆகியோர்தான் காரணம். அதில் ஹீரோவாக நடித்த நான் பொம்மைபோல இருந்தேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்