இனி அப்படிப்பட்ட கதைகளில் நடிக்க மாட்டேன் - ரச்சிதா மகாலட்சுமி

நடிகை ரச்சிதா மகாலட்சுமி விக்ரந்துடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.;

Update:2025-06-18 18:03 IST

சென்னை,

நடிகை ரச்சிதா மகாலட்சுமி 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இவர் 2015 ம் ஆண்டு வெளியான உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் 'பயர், எக்ஸ்ட்ரீம்' ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படங்களில் இவரது நடிப்பில் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து இவர் விக்ரந்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

'பயர்' படத்தில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கவர்ச்சியாக நடித்திருந்தாலும், இனிமேல் கவர்ச்சியான கதைகளில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளராம். இவர் அடுத்ததாக வெப் சீரிஸில் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்