'சச்சின்' தோல்வி படமா? - தயாரிப்பாளர் கொடுத்த சுவாரஸ்ய பதில்

ரீ-ரிலீஸான 'சச்சின்' படத்தை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.;

Update:2025-04-27 13:24 IST

சென்னை,

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'சச்சின்'. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். தாணு தயாரித்திருந்த இப்படத்தில் வடிவேலு, ரகுவரன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில், 'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கடந்த 18-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 4 கே தரத்தில் வெளியான இப்படத்தை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ரீ-ரிலீஸில் மாபெரும் வசூல் சாதனை செய்தது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் ஜான் மகேந்திரன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் நடன இயக்குனர் ஷோபி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். அப்போது, 'சச்சின்' படம் முதலில் வெளியான போது அது தோல்வியடைந்தது என்கிறார்களே அது உண்மையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தாயரிப்பாளர் தாணு சுவாரஸ்ய பதிலளித்துள்ளார்.

அதாவது, சச்சின் படம் வெளியான அந்தச் சமயத்தில் விநியோகஸ்தர்கள் அனைவருமே நல்ல லாபம் கிடைத்ததாக கூறினர். மேலும் எனக்கொரு தொகையைக் கொடுத்தார்கள். அதில் ஒரு தொகையைக் கொண்டு போய் நான் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரிடம் கொடுத்தேன். லாபம் வந்தால் போதும் என்று அந்த பணத்தை அவர் எனக்கு திரும்பிக் கொடுத்தார். இதுதான் இந்தக் கேள்விக்கான பதில்" என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்