அகரம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கிய ''ஜெய் பீம்'' இயக்குனர்
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.;
சென்னை,
சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கி இருக்கிறார் ஜேய் பீம், வேட்டையன் பட இயக்குனர் த.செ.ஞானவேல்.
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், த.செ.ஞானவேல், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில், இயக்குனர் த.செ.ஞானவேல் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார். அண்மையில் தான் நடித்த 'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த பத்து கோடி ரூபாயை 'அகரம் அறக்கட்டளை'க்கு நன்கொடையாக அளித்திருந்தார் சூர்யா.