அம்மா நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்கும் மகள்?

ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடித்த 'சால்பாஸ்' படத்தின் ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-09-07 18:17 IST

சென்னை,

ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ''பரம் சுந்தரி'' படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை தொடர்ந்து, தற்போது தனது தாயும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடித்த 'சால்பாஸ்' படத்தின் ரீமேக்கில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக 'சால்பாஸ்' படத்தின் ரீமேக்கில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது அடுத்தக்கட்டத்திற்கு செல்லவில்லை.

இப்போது, ​​ஜான்வி கபூர் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Tags:    

மேலும் செய்திகள்