ஜப்பானில் வரவேற்பு பெறும் 'ஜவான்' - ஷாருக்கான் நெகிழ்ச்சி

கடந்த 29-ம் தேதி ஜப்பானில் வெளியான 'ஜவான்' நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.;

Update:2024-12-01 17:52 IST

மும்பை,

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீசில் கலக்கியது. 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1,143.59 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனையடுத்து, இப்படம் ஜப்பானில் வெளியாகும் என்று இயக்குனர் அட்லீ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஜவான் கடந்த 29-ம் தேதி வெளியானது. இப்படம் அங்கு நல்ல வரவேற்பு பெற்றுவரும்நிலையில், ஷாருக்கான் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

'ஜவானுக்கு ஜப்பானில் இருந்து கிடைக்கும் அன்பைப் பார்த்து வருகிறேன். இந்தியாவில் மட்டுமிலாமல் எல்லா இடங்களிலும் ஜவான் ரசிக்கப்படுவதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. உங்கள் அற்புதமான நாட்டில் இந்தப் படத்தை மேலும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஜப்பானில் இதைப் பார்த்த அனைவருக்கும் எனது நன்றி' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்