சீரியல் நடிகைக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை...போலீஸ் அதிரடி

ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி தன்னை ஒருவர் துன்புறுத்தியதாக சீரியல் நடிகை போலீசில் புகார் அளித்திருக்கிறார்.;

Update:2025-11-04 17:08 IST

பெங்களூரு,

கன்னட-தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் நடிகை, பேஸ்புக்கில் ஒருவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஆரம்பத்தில் ஒரு ஐடியிலிருந்து நடிகைக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பியதாகவும், அதை நடிகை நிராகரித்ததாகவும் தெரிகிறது. 

அந்த நபரை நடிகை ‛பிளாக்' செய்தாலும், வெவ்வேறு ஐடியிலிருந்து தொடர்ந்து இதையே செய்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, நடிகை போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து அதிரடி காட்டிய போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்