சயீப் அலிகானின் கத்தி குத்து சம்பவத்திற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த கரீனா கபூர்

நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் சயீப் அலிகான், கரீனா கபூர் ஜோடி;

Update:2025-02-12 07:08 IST

மும்பை,

பாலிவுட்டில் பல படங்களில் இணைந்து நடித்து தற்போது நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் சயீப் அலிகான், கரீனா கபூர் ஜோடி. இவர்கள் மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கள் மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த மாதம் சயீப் அலிகானை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேரிவருகிறார் சயீப் அலிகான்.

இந்நிலையில், இந்த சம்பவத்தால் ஒரு மாத காலம் படப்பிடிப்பில் ஈடுபடாமல் இருந்த கரீனா கபூர் தற்போது மும்பையில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்