'நீ என் உயிர்'... வைரலாகும் கார்த்திக் ஆர்யன் பகிர்ந்த புகைப்படம்

ஸ்ரீலீலா , கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.;

Update:2025-03-29 06:38 IST

மும்பை,

பாலிவுட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரமான கார்த்திக் ஆர்யன் தற்போது அனுராக் பாசு இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில், ஸ்ரீலீலா காதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

படம் வெளியாவதற்கு முன்பே, இருவரும் காதலிப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவ துவங்கின. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு மேலும் மெருகேற்றும் வகையில் கார்த்திக் ஆர்யன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

டார்ஜிலிங்கில் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டத்தின் நடுவில் உள்ள பெஞ்சில் கார்த்திக் ஆர்யன் மற்றும் ஸ்ரீலீலா அமர்ந்துள்ளனர். அதனுடன் 'நீ என் உயிர்' என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமா அல்லது தங்கள் காதலை அதிகாரபூர்வமாக்கினார்களா என்று ரசிகர்களை ஊகிக்க வைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்