கரூர் துயரம்: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இரங்கல்
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.;
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்குமேல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்த அதிர்ச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். அந்தக் குடும்பங்கள் தாங்க முடியாத இந்த வலியை கடந்து வருவார்கள் என நம்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.