கிச்சா நடிக்கும் "கே47" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

கிச்சா நடிக்கும் “கே47” படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் 7ம் தேதி தொடங்க இருக்கிறது.;

Update:2025-07-05 21:41 IST

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.

இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இப்படம் தற்பொழுது 'கே47' என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் வரும் 7ம் தேதி தொடங்க இருக்கிறது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்