இஸ்ரேல் நடிகையின் திரைப்படத்தை வெளியிட தடை விதித்த லெபனான்

’வொண்டர் வுமன்’ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் இஸ்ரேலிய நடிகையான கால் கடோட்.;

Update:2025-04-18 06:48 IST

சென்னை,

ஹாலிவுட்டில் 'வொண்டர் வுமன்' கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் இஸ்ரேலிய நடிகையான கால் கடோட். இவர் தற்போது 'ஸ்னோ வைட்' என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மார் வெப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில், கால் கடோட், ரேச்சல் ஜெக்லர், ஆண்ட்ரூ பர்னாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் தற்போது திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும்நிலையில், லெபனானில் உள்ள திரையரங்குகளில் திரையிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இஸ்ரேல் - லெபனான் இடையேயான போர் சூழலால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்