’என்னைப் போன்றவருடன் வாழ்வது எளிதான விஷயமல்ல’ - நடிகர் அஜித்

நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார்.;

Update:2025-11-01 09:30 IST

சென்னை,

மனைவி ஷாலினி குறித்து நடிகர் அஜித்குமார் நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், “நான் ஷாலினிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ரேஸிங்கில் பங்கேற்கிறேன், சண்டை காட்சிகளில் நானே நடிக்கிறேன். என்னைப் போன்றவருடன் வாழ்வது எளிதான விஷயமல்ல. ஆனால் ஷாலினி எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இவையெல்லாம் அவரின் துணையின்றி சாத்தியமாகி இருக்காது" என்றார்.

நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கிய ஆதிக் மீண்டும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்