’மகாபாரதம்’ நடிகர் பங்கஜ் தீர் காலமானார்

மகாபாரதம் தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் பங்கஜ் தீர்.;

Update:2025-10-15 15:33 IST

மும்பை,

தூர்தர்ஷன் சேனலில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் பங்கஜ் தீர். கர்ணன் கதாப்பாத்திரத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சந்திரகாந்தா, கானூன் போன்ற தொலைக்காட்சித் தொடர்களும், சசுரல் சிமர் கா, சோல்ஜர், ஆண்டாஸ், பாட்ஷா மற்றும் தும்கோ நா பூல் பாயேங்கே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மும்பையில் அபின்னே ஆக்டிங் அகடமி நடத்தி வந்த பங்கஜ் தீர், அவரது சகோதரருடன் இணைந்து பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். 68 வயதான பங்கஜ் தீர் புற்று நோய் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். , கடந்த சில மாதங்களாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். பங்கஜ் தீர் உடலுக்கு இறுதிச் சடங்குகள் மும்பை வில்லே பார்லே அருகே இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்