வேட்டைக்கு தயாராகும் சிங்கம்...வைரலாகும் மகேஷ் பாபுவின் வொர்க் அவுட் வீடியோ

மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடிக்கிறார்.;

Update:2025-03-01 06:50 IST

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், மகேஷ் பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், மகேஷ் பாபுவின் வொர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேட்டைக்கு தயாராகும் சிங்கம் என்று கருத்து பகிர்ந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்