பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் மகேஷ் பாபுவின் ''எஸ்எஸ்எம்பி29''
''எஸ்எஸ்எம்பி29'' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;
சென்னை,
ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்எஸ்எம்பி 29' எனப்பெயரிடப்பட்டுள்ளது.இதில் பிருத்வி ராஜ், பிரியங்கா ஜோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இப்படம் காசியின் வரலாற்றை பற்றி பேசும் தொன்ம கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'எஸ்எஸ்எம்பி 29' படம் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.1200 என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையானால், இதுவே இந்திய சினிமாவில் அதிக செலவில் எடுக்கப்படும் திரைப்படமாகும். பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை சுமார் 130க்கும் அதிகமான மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.