யார் இந்த மேதா ராணா?...''பார்டர் 2'' படத்தில் வருண் தவானுக்கு ஜோடி...அவரை விட 13 வயது இளையவர்

1999-ல் பிறந்த மேதா ஒரு இராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.;

Update:2025-07-29 08:37 IST

சென்னை,

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''பார்டர் 2'' படத்தின் தயாரிப்பாளர்கள் இறுதியாக கதாநாயகியை அறிவித்துள்ளனர். மேதா ராணா, வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். வருண் தவானை விட 13 வயது இளையவரான இவருக்கு இது முதல் பெரிய பாலிவுட் படமாகும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 23 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் 1997-ம் ஆண்டு வெளியான பார்டரின் தொடர்ச்சியாகும்.

நடிகை மேதா அனைவருக்கும் புதிய பெயராக இருந்தாலும், அவர் இன்ஸ்டாகிராமில் 186,000 பாளோவர்ஸ்களை வைத்திருக்கிறார். மாடலிங், இசை வீடியோகள் மற்றும் ஓடிடி தொடர்களில் நடித்திருக்கிறார்.

1999-ல் பிறந்த மேதா ஒரு இராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர். 2022-ம் ஆண்டில், மேதா நடிப்பில் களமிறங்கினார். லண்டன் பைல்ஸில் அர்ஜுன் ராம்பால் மற்றும் புரப் கோஹ்லியுடன் நடித்தார்.

பின்னர் நெட்பிளிக்ஸின் ''பிலிம் ப்ரைடே நைட் பிளான்'' படத்திலும், அமேசானின் எம்எக்ஸ் பிளேயர் தொடரான ''இஷ்க் இன் தி ஏர்'' படத்திலும் நடித்தார்.

தற்போது ''பார்டர் 2'' படத்தில் நடிக்கிறார். அனுராக் சிங் இயக்கும் இப்படத்தில் வருண் தவான், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் சன்னி தியோல் ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்