இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
அந்த வகையில் நாளை (10.07.2025) சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள "பீரிடம்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து நாளை மறுநாள் (11.07.2025) "சூப்பர் மேன், ஓஹோ எந்தன் பேபி, தேசிங்குராஜா 2, மாலிக், மாயக்கூத்து, ஓ பாமா அய்யோ ராமா, மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் மற்றும் சூத்ரவாக்யம்" ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.