அடுத்த படம்...யாருடன் இணைய போகிறார் ரஜினிகாந்த் ?

இயக்குனர் நிதிலன் சாமிநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.;

Update:2025-07-15 06:45 IST

சென்னை,

தொடர் தோல்விகளுக்குப் பிறகு, விஜய் சேதுபதிக்கு ''மகாராஜா'' கம்பேக் படமாக அமைந்தது. நிதிலன் சாமிநாதன் இயக்கிய இந்த படம், ரூ. 120 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது.

பின்னர் சீனாவிலும் இந்த படம் வெளியாகி பிரமாதமாக ஓடியது. இதனைத்தொடர்ந்து, நிதிலன் சாமிநாதன் அடுத்து யாரை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் நிதிலன் சாமிநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயக்குனரின் கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கும் என்று தெரிகிறது.

ஜெயிலர் 2 படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் இந்த திட்டத்தின் பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இயக்குனர்கள் எச். வினோத் மற்றும் விவேக் ஆத்ரேயா ஆகியோரும் சூப்பர் ஸ்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் யாருடைய கதைக்கு ஓகே சொல்வார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்