தெலுங்கு சினிமாவுக்கு திரும்புகிறாரா பூஜா ஹெக்டே?
தெலுங்கு சினிமாவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.;
சென்னை,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவுக்கு மீண்டும் திரும்பத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்திற்கான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டிருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் ஒரு காதல் கதை என்றும், ரவி என்ற புதுமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தெரிகிறது.
'தசரா' மற்றும் வரவிருக்கும் 'தி பாரடைஸ்' படங்களின் தயாரிப்பாளர்களால் இப்படம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கில் பூஜா ஹெக்டேவின் கடைசி வெற்றி படம் 'வைகுண்டபுரம்' ஆகும். தெலுங்கு சினிமாவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
தற்போது பூஜா ஹெக்டே , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் ஆக்சன் படமான 'கூலி' படத்தில் 'மோனிகா' பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, அமீர்கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.