நடிப்புக்கு திருமணம் தடையில்லை...நிரூபித்த நடிகைகள்

பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் திரை வாழ்க்கையைத் தொடர்வதன் மூலம், நடிப்புக்கு திருமணம் தடையாகாது என்பதை நிரூபித்துள்ளனர்.;

Update:2025-09-12 17:24 IST

சென்னை,

திருமணத்திற்குப் பிறகு நடிகைகளின் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எப்போதுமே விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஆனால், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிப்புக்கு திருமணம் தடையாகாது என்பதை நிரூபித்துள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் அனைவரும் தங்கள் கெரியரை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும்நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

திருமணம் நடிகைகளின் வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்துக்கோ தடை போடாது என்று ரகுல் பிரீத் சிங் கூறினார். இவர்கள் மட்டுமில்லாமல் மேலும் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார்கள். பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் திரை வாழ்க்கையைத் தொடர்வதன் மூலம், நடிப்புக்கு திருமணம் தடையாகாது என்பதை நிரூபித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்