ரன்பீர், யாஷ், சாய் பல்லவி நடிக்கும் ராமாயணத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது?

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ராமாயணம்.;

Update:2025-04-27 16:54 IST

மும்பை,

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ராமாயணம். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று.

நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ராமாயணத்தின் பர்ஸ்ட் லுக் மும்பையில் அடுத்த மாதம் 1-4 வரை நடைபெற உள்ள வேர்ல்ட் ஆடியோ விஷுவல் மற்றும் என்டர்டெயின்மென்ட் (வேவ்ஸ்) உச்சிமாநாட்டின்போது வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரன்பீர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்